Loading...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ளதால் இன்று (17) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாட்டில் இன்று முதல் எதிர்வரும் 19 ஆம் திகதிவரையான காலப்பகுதியில், மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பான அறிவிப்பை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
Loading...
இதற்கமைய, எதிர்வரும் மூன்று தினங்களில் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் இரண்டு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
A முதல் L மற்றும் P முதல் W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும், இரவில் ஒரு மணி 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
Loading...