நிதி நிலை உயரும் நாள். நிகழ் காலத் தேவைகள் பூர்த்தியாகும். பரபரப்பாக செயல்பட்டு பலரது பாராட்டுக்களையும் பெறுவீர்கள். நிழல்போல தொடர்ந்த கடன் சுமை குறையும். எதிரிகள் விலகுவர்.
வளர்ச்சி கூடும் நாள். வாரிசுகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் வழி ஒத்துழைப்புகள் கிடைக்கும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.
காலை நேரத்திலேயே கலகலப் பான செய்தி வந்து சேரும் நாள். பணவரவு திருப்திகரமாக இருக் கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சி னைகள் அகலும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.
புத்திசாலித்தனமான செயல் பாடுகளால் புகழ் பெறும் நாள். புதிய நண்பர்களின் ஆலோசனைகளால் பொருளாதார நிலை உயரும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். வீட்டு உபயோகப் பொருட் களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியாக உறவினர்கள் உங்களிடம் உதவியை நாடி வரலாம். அஞ்சல் வழித் தகவல் அனுகூலம் தரும்.
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். அலைச்சல் அதிகரித்தாலும், அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயண மொன்றை மேற்கொள்வீர்கள்.
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். பக்க பலமாக இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வருமானம் திருப்தி தரும்.
நட்பால் நல்ல காரியம் நடை பெறும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. பங்குதாரர்கள் தொழிலில் பக்க பலமாக இருப்பர்.
திட்டமிட்ட காரியங்கள் திட்ட மிட்டபடியே நடைபெறும் நாள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நீங்கள் செய்யும் செயல்கள் உங்களின் திறமைகளை வெளிபடுத்துவதாக அமையும்.
வம்பு வழக்குகளை சமாளித்து வளம் காணும் நாள். இடம், பூமி வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்று இனத்தவர் ஒத்துழைப்பு உண்டு.
கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. குடும்பத்தினர் உங்கள் செயல்பாடுகளில் குறை கண்டுபிடிக்கலாம்.