- பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 304 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
- இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 354 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
கராச்சி:
பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 79 ஓவரில் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி 78 ரன்னில் அவுட்டானார். அகா சல்மான் 56 ரன்னில் வெளியேறினார்.
இங்கிலாந்து சார்பில் ஜாக் லீச் 4 விக்கெட்டும், ரேஹான் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாக் க்ராவ்லி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 7 ரன் எடுத்தது.
இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் ஹாரி புரூக்கின் பொறுப்பான சதத்தால்354 ரன்களில் ஆல் அவுட்டானது. புரூக் 11 ரன்னிலும், பென் போக்ஸ் 64 ரன்னிலும், ஒல்லி போப் 51 ரன்னிலும் அவுட்டாகினர்.
பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமது, நவ்மான் அலி ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர இறுதியில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.