Loading...
பீகார் மாநிலம் பெகுசாய் பகுதியில் உள்ள கந்தக் ஆற்றின் குறுக்கே 206 மீட்டர் நீளமுள்ள பாலம் மக்கள் பாவணைக்கு வரும் முதலே இடிந்து விழுந்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு பாலம் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டது 2017ஆல் முடிவடைந்தது. ஆனால், அணுகு சாலை இல்லாததால், பாலம் திறக்கப்படாமல் இருந்தது. நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்தப் பாலத்தின் முன்பகுதியில் விரிசல் ஏற்பட்டது.
Loading...
இது குறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று அந்த பாலத்தின் முன்பகுதி இடிந்து விழுந்தது.
ரூ.13 கோடியில் கட்டப்பட்டு திறக்கப்படும் முன்பே பாலம் இடிந்து விழுந்தது பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Loading...