Loading...
தற்போது அமைந்துள்ள முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி மக்களுக்கு விரோதமான ஆட்சி என்று எதிர்கட்சித்தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும், அவர் (எடப்பாடி பழனிச்சாமி) பதவியில் நீடிக்க வேண்டும் என்றால் சட்டசபையில் என்னைப் பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளா் சசிகலா சமீபத்தில் பேட்டியளித்த போது, எதிர்கட்சித்தலைவரும் முதல்வரும் சட்டசபையில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர், சிரித்துக்கொண்டனர் இதன் மூலம் அவர் அதிமுகவிற்கு துரோகம் செய்துவிட்டார் என்று கூறினார்.
சட்டசபையில் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டதற்கு பதவி பறிக்கப்பட்டது. இதேபோல புதிய முதல்வருக்கும் நடந்து விடக்கூடாது என்பதற்காகவே முன்னெச்சரிக்கையாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
Loading...