ஏழு தலை நாகம் குடைபிடிக்க சயனித்த கோலத்தில் மகாவிஷ்ணு வீற்றிருக்கிறார்.
அவரது தலைக்கு அருகாமையில் சிவலிங்கம் ஒன்றும் காணப்படுகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ளது, பாந்தவ்கிரா தேசிய பூங்கா. இங்கு ஏராளமான வன விலங்குகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை காண்பதற்காக தேசிய பூங்காவை சுற்றி வரும்போது, ஒரு இடத்தில் பல நூற்றாண்டுகள் பழமையான, இந்த சயன கோல விஷ்ணு சிலையையும் பார்க்கலாம்.
ஏழு தலை நாகம் குடைபிடிக்க சயனித்த கோலத்தில் மகாவிஷ்ணு வீற்றிருக்கிறார். அவரது தலைக்கு அருகாமையில் சிவலிங்கம் ஒன்றும் காணப்படுகிறது. மகாவிஷ்ணு சயனித்திருக்கும் இடத்தை ஒட்டி, ஆக்சிஜனை அதிக அளவில் உருவாக்கும் சயனோ பாக்டீரியாக்கள் நிரம்பிய குளம் இருக்கிறது. இந்த குளத்தின் அருகில் நின்று மகாவிஷ்ணுவின் அழகை தரிசித்தாலே, தூய்மையான ஆக்சிஜனை நாம் உணர முடியும்.