Loading...
பாவை நோன்பின் மூலம் பெண்கள் ஆதிசக்தியை வழிபடும் மாதம் இது.
இம்மாதத்தில் முருகப்பெருமானுக்கு உற்சவம் நடத்தப்படுகிறது.
Loading...
- இம்மாத திருவாதிரை நட்சத்திரம் அன்று ஆருத்ரா தரிசனம் நடைபெறும். இந்நாளில் நடராஜப் பெருமானும், சிவபெருமானும் வணங்கப்படுகிறார்கள்.
- ரமண மகரிஷி, சாரதாதேவி, பாம்பன் சுவாமிகள் ஆகியோர் இம்மாதத்தில்தான் அவதரித்தனர்.
- பாவை நோன்பின் மூலம் பெண்கள் ஆதிசக்தியை வழிபடும் மாதம் இது.
- வைணவர்களால் கொண்டாடப்படும் பெரும் விழாக்களில் ஒன்றான ‘வைகுண்ட ஏகாதசி’ நடைபெறும் மாதம். இந்நாளில் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்படும்.
- 12 ஆழ்வார்களில் ஒருவரான தொண்டரடிப் பொடியாழ்வார் ஜெயந்தி தினம் இம்மாதம் தான் வருகிறது.
- 63 நாயன்மார்களில் சடைய நாயனார், இயற்பகை நாயனார், மானக்கஞ்சாற நாயனார், வாயில நாயனார், சாக்கிய நாயனார் ஆகியோரின் குரு பூஜை இம்மாதத்தில் நடைபெறுகிறது.
- இம்மாதத்தில் முருகப்பெருமானுக்கு உற்சவம் நடத்தப்படுகிறது.
Loading...