இலங்கையின் வெளிநாட்டு கடனை மறுசீரமைப்பதற்கான முறையான குழு, இன்னும் நடைமுறையில் இல்லை என்று நிதி அமைச்சுக்கு நெருக்கமான தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இந்த தகவலை வெளிநாட்டு செய்திச்சேவை ஒன்று வெளியிட்டுள்ளது.
2.9 பில்லியன் டொலர்களுக்கான பணியாளர் அளவிலான ஒப்பந்தத்தை, இலங்கை அரசாங்கம், கடந்த செப்டம்பரில், சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்டது.
இலங்கைக்கு நிதியுதவி கிடைக்காது
எனினும், சர்வதேச நாணய நிதியின் நிர்வாகக் குழு இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்கும் வரை இலங்கைக்கு நிதியுதவி கிடைக்காது.
இதன் அடிப்படையில் இருதரப்பு கடன் வழங்குபவர்களிடமிருந்து மறுசீரமைப்பு உத்தரவாதத்தை பெறும் நோக்குடன் பேச்சுக்கள் இடம்பெறுகின்றபோதும், இன்னும் தெளிவான முடிவுகள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் சீனாவே இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குநராக உள்ளது. இலங்கைப் பெற்றுள்ள வெளிநாட்டு கடனில், இது 20 வீதமாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.