Loading...
பதுளை ஹப்புத்தளை பிடரத்மலை தோட்டத்தில் உள்ள வீடொன்றில் குழந்தையை உறங்க வைக்க கட்டப்பட்ட சேலை தொட்டிலில் கழுத்து இறுகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
12 வயதான சிறுவன்
12 வயதான இந்த சிறுவன் கடந்த 22 ஆம் திகதி இரவு தனது சகோதரர்களுடன் விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.
Loading...
சிறுவனின் தாய் ஏனைய இரண்டு பிள்ளைகளை உறங்க வைப்பதற்காக வேறு ஒரு அறைக்கு அழைத்துச் சென்ற போது, இளைய தங்கையை உறங்க வைப்பதற்காக சேலையில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் விளையாடியுள்ளார்.
அப்போது தொட்டில் கட்டப்பட்டிருந்த சேலை கழுத்தில் இறுகி சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Loading...