சென்னை விமான நிலையத்துக்கு இன்று வந்த இலங்கையைச் சேர்ந்த சில பயணிகள் உட்பட ஒரு குழுவினருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில், சர்வதேச பயணிகளின் கோவிட் சோதனை நடைமுறைகளை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, மாநிலத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு சதவீத சர்வதேச பயணிகளின் சோதனை நடத்தப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் கோவிட் பரிசோதனை
சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய், தோஹா மற்றும் இலங்கை வெளிநாடுகளில் இருந்து வரும் குறைந்தபட்சம் 37 சர்வதேச பயணிகள் சர்வதேச சென்னை விமான நிலையத்தில் இன்று சோதனை செய்யப்பட்டனர்.
எனினும் அவர்களில் யாருக்கும் இதுவரை எந்த அறிகுறியும் இருக்கவில்லை என்று அமைச்சர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்காக 1.15 லட்சம் படுக்கைகள் உள்ளன, அவற்றில் 72,000 படுக்கைகள் கோவிட் நோயாளிகளுக்காக தயாராக உள்ளன என்று அமைச்சர் கூறினார்.
உலகின் சில பகுதிகளில் கோவிட் தொற்றுக்கள் அதிகரித்து வருவதால், இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு பிசிஆர் சோதனைகளை மேற்கொள்ள இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.