உலக வாழ் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்கள் இயேசுவின் பிறப்பு விழாவான நத்தார் பண்டிகையை இன்று கொண்டாடுகின்றனர்.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி யாழ். புனித மரியன்னை ஆலயத்தில் இடம்பெற்றது.
யாழ். மறை மாவட்ட ஆயர் பேரருட் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டு திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதன் போது ஆலயத்தினுள் அமைக்கப்பட்டுள்ள யேசு பாலகனின் பிறப்பை வெளிப்படுத்தும் பாலன் குடில் ஆயர்களினால் ஒளியேற்றப்பட்டு விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.
இந்த நத்தார் நள்ளிரவு திருப்பலியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு யேசு பாலகனின் பிறப்பை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதன்போது, ”பகிர்ந்தழித்து வாழ்ந்தால் வேறு யாரிடமும் கடன் வாங்க தேவையில்லை” என யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.
யாழ். மரியன்னை ஆலய பெற்ற யேசு பிறப்பு விசேட திருப்பலியினை ஒப்புக்கொடுத்த உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வசதி படைத்தவர்கள் தம்மிடம் உள்ள பணத்தினை வறியவர்களுக்கு பகிர்ந்தால் நாங்கள் வேறு எவரிடமும் கடன் வாங்க தேவையில்லை வசதி படைத்தவர்கள் செல்வந்தவர்கள் தம்மிடமுள்ள பணத்தினை பகிர்ந்தளித்தால் அனைவரும் சந்தோஷமாக வாழலாம்.
ஆனால் இந்த நாட்டில் அவ்வாறான நிலை இல்லை இன்று நாடு இவ்வாறான நிலைக்கு செல்வதற்கு காரணம் இவ்வாறான ஒரு நிலை தான்.
ஒரு மனிதன் ஏழைகளுக்கு உணவளித்து தன்னிடம் உள்ளவற்றை இல்லாதவர்களுக்கு பரிந்தளித்து வாழ்ந்தாலே அது சிறந்த வாழ்க்கையாகும், கிறிஸ்து இயேசு பிறப்பு தினத்திலாவது நாங்கள் பகிர்ந்து அளித்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.
ஏழை எளியவர்களுக்கு உணவளித்து வாழ பழகிக்கொள்ள வேண்டும் அவ்வாறு வாழ்ந்தால் எமது நாடு முன்னேற்றம் அடையும் எனவே இந்த இயேசு கிறிஸ்து பிறப்பு தினத்தில் நாங்கள் பகிர்ந்து உண்டு வாழ்வதற்கு கட்டாயமாக முயற்சிக்க வேண்டும்.
நாங்கள் எங்களைப் பற்றி மாத்திரமே சிந்திக்கின்றோம் மற்றவர்களை பற்றி சிந்திப்பதில்லை எமது வாழ்க்கை முறையினை கட்டாயமாக மாற்ற வேண்டும் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமாக இருந்தால் கட்டாயமாக பகிர்ந்தளித்துவாழ்ந்தால் மாத்திரமே மகிழ்ச்சியாக வாழ முடியும் நாங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும். மற்றவர்களுக்கு உடை உரையில் போன்ற ஏனைய விடயங்கள் தொடர்பிலும் நாங்கள் மற்றவர்களுக்கு உதவ முன் வர வேண்டும். என்றார்.