Loading...
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் 24 பேர் நேற்று சென்னை திரும்பியுள்ளனர்.
புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 24 கடற்றொழிலாளர்;கள் 5 படகுகளில் நவம்பர் மாதம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
அவர்கள் நடுக்கடலில் இருந்தபோது, எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கையின் கடற்படையினர், அவர்களை கைது செய்துள்ளனர்.
Loading...
இதையடுத்து அவர்களை விடுவித்து இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களின் குடும்பத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.
இதையடுத்து கடற்றொழிலாளர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு இந்திய தூதரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Loading...