Loading...
நத்தார் தினமான இன்று (25) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கத்தோலிக்க கைதிகளுக்கு மாத்திரம் விசேட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க கைதிகளுக்கு மாத்திரம் பார்வையாளர்களை காண்பதற்காக ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Loading...
அதன்படி, கைதிகளை பார்வையிட வருபவர்களுக்கு முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஒரு கைதிக்கு மட்டும் போதுமானதாக இருக்கும் வகையில் உறவினர்கள் உணவு கொண்டு வர வேண்டும் என்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
Loading...