சிறந்த கிரிக்கெட் வீரரின் சிறப்பு நினைவு பரிசு என ஹசன் கருத்து
இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதை ஹசன் வென்றார்.
இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் வங்காளதேச நட்சத்திர வீரர் மெகிதி ஹசன் சிறப்பாக செயல்பட்டார். ஒருநாள் தொடரில் வங்களாதேசம் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெறுவதற்கு அவர் முக்கிய பங்காற்றினார். ஒருநாள் தொடரில் அவர் சராசரியாக 141 ரன்கள் எடுத்ததுடன் 4 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தார்.
இதன் மூலம் ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார். டெஸ்ட் தொடரில், மொத்தம் பதினொரு விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். இந்நிலையில் மெகிதி ஹசனுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, தனது ஆட்டோகிராப் போடப்பட்ட ஜெர்சியை பரிசாக வழங்கினார். விராட் 18 என எழுதப்பட்டிருந்த அந்த ஜெர்சியை பெற்றுக் கொண்ட ஹசன், சிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சிறப்பு நினைவு பரிசு என்று தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்