Loading...
ஆளும்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டு உறுப்பினர்கள் விரைவில் எதிர்க்கட்சியில் அமரத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் ஒருவர், மாவட்ட தலைவராகவும் அமைச்சராகவும் சில காலம் பணியாற்றினார் என தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் செயற்பாடுகளால் ஏமாற்றம் அடைந்த நிலையில் இருவரும் எதிர்க்கட்சியில் இணைந்துகொள்ள தீர்மானித்ததாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Loading...
இந்த இரண்டு உறுப்பினர்களும் முன்வைத்த பரிசீலனைகளை அரசாங்கம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என அறியப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பல்வேறு காரணங்களால் இதற்கு முன்னர் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...