70 மற்றும் 80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயசுதா.
இவர் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
1970 மற்றும் 80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயசுதா. இவர் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தென்னிந்திய சினிமாவிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தற்போது கவலையை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெயசுதா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, “நடிகை கங்கனா ரணாவத் 10 படங்கள் நடிப்பதற்குள் அவருக்கு விருது வழங்கப்பட்டது. ஆனால் பல தசாப்தங்களாக தொழில்துறையில் பணியாற்றிய நடிகர்களுக்கு அவர்களின் பணிக்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
கங்கனா ரணாவத்துக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததில் எனக்கு கவலையில்லை. அவர் ஒரு அற்புதமான நடிகை. இருப்பினும், அவர் 10 படங்கள் நடிப்பதற்குள் அந்த விருதைப் பெற்றார். இங்கு, நாங்கள் பல படங்களில் பணியாற்றியும் இன்னும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. கின்னஸ் சாதனை படைத்த இயக்குனர் விஜய நிர்மலாவுக்கு கூட இதுபோன்ற பாராட்டு கிடைக்கவில்லை சில சமயங்களில், தென்னிந்திய திரையுலகத்தினரை இந்திய அரசாங்கம் பாராட்டுவதில்லை என்று நான் வருத்தப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.