Loading...
- இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் ‘கிக்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘கிக்’. இந்த படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இதைத்தொடர்ந்து சந்தானம் மீண்டும் திரில்லர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதனை சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகர் சந்தானம் புலியுடன் விளையாடும் வீடியோவை தனது இணையப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த பதிவில் “இதன் பெயர் தான் புலி வாலை பிடிக்கிறதா” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Loading...