Loading...
முல்லைத்தீவு- கொக்களாய் முகத்துவாரம் பகுதியில் கடற்றொழில் நடவடிக்கைக்காக படகு ஒன்றினை செலுத்தும் போது படகு விபத்திற்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கடற்றொழில் நடவடிக்கைக்காக இன்று (26.12.22) காலை சென்றிருந்த நிலையிலே விபத்து நேர்ந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
மீகமுவ பிரதேசத்தினை சேர்ந்த 56 அகவையுடை குடும்பஸ்தரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
Loading...
உயிரிழந்தவரின் உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்தின் போது காயமடைந்த மற்றைய கடற்றொழிலாளர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து கொக்குளாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Loading...