அனுராதபுரம் கல்னேவ பிரதேசத்தில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக தந்தையின் பாலியல் துன்புறுத்தல்களை தாங்க முடியாத சிறுமி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளர்.
12 வயதான சிறுமி 12 கிலோமீற்றர் தூரம் தனியாக நடந்து சென்று கல்னேவ பொலிஸாரிடம் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார். அதன் பின்னர், பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்ற சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டதாக கல்னேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் கம்பளை பிரதேசத்தில் இருந்து சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் கல்னேவ பிரதேசத்திற்கு வந்த 35 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி ஐந்தாம் வகுப்பில் வயதிற்கு வந்துள்ளதாகவும் அன்றிலிருந்து கடந்த இரண்டு வருடங்களாக தந்தை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக சிறுமி முறைப்பாடு செய்துள்ளார்.
5 நாட்களுக்கு முன்னர், சிறுமியின் தாய், கம்பளைக்கு தேயிலை பறிக்கச் சென்ற போது, சந்தேகநபரான தந்தை பல தடவைகள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
தனது தந்தையின் தொடர்ச்சியான பாலியல் செயல்களை பொறுத்துக் கொள்ள முடியாத காரணத்தினால் குறித்த சிறுமி நேற்றுமுன்தினம் கல்னேவ பொலிஸ் நிலையத்திற்கு வந்து அனைத்தை விடயங்களையும் தெரிவித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பான வாக்குமூலங்களைப் பதிவுசெய்த பின்னர், பொலிஸ் குழுவொன்று உடனடியாக வீட்டுக்குச் சென்றபோது, சந்தேகநபரான தந்தை பிரதேசத்தை விட்டு வெளியேறி ஓடிக்கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவத்தை எதிர்கொண்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.