ரியல்மி நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
சமீபத்தில் தான் ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் வெளியீட்டை தொடர்ந்து ரியல்மி 10 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டுக்கு அந்நிறுவனம் தயாராகி வருகிறது. புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசரில், “EpicPowerhouse” எனும் வாசகம் இடம்பெற்று இருக்கிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் அசத்தல் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது.
இத்துடன் புது ஸ்மார்ட்போனின் இடது புறத்தில் பன்ச் ஹோல் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி 10 4ஜி மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ்-இல் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 10 4ஜி ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் FHD+ 90Hz AMOLED ஸ்கிரீன், 16MP செல்ஃபி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 8 ஜிபி ரேம், 50MP பிரைமரி கேமரா, 2 MP போர்டிரெயிட் கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய ரியல்மி 10 ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி மற்றும் இதர விவரங்கள் வரும் நாட்களில் படிப்படியாக அறிவிக்கப்படலாம்.