Loading...
ரஷ்யாவின் ரெட் விங்ஸ் விமான சேவை இன்று (வியாழக்கிழமை) முதல் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
ரெட் விங்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளது.
Loading...
இதற்கமைய இன்று முதல் வாரத்திற்கு இரண்டு முறை இலங்கைக்கு விமான சேவைகள் மேற்கொள்ளப்படும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த விமானத்தில் 404 ரஷ்ய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வரவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச குறிப்பிட்டுள்ளார்.
Loading...