புதிய பாதை படத்தில் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் பார்த்திபன்.
இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.
1989-ம் ஆண்டு புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் பார்த்திபன். அதன்பின்னர் பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே, ஹவுஸ் ஃபுல், கதை திரைக்கதை வசனம் உள்ளிட்ட பல படங்கை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். இவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.
இந்நிலையில் பார்த்திபன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருதுகளை குவித்த ஆடுகளம் படத்தில் நடிக்க அழைப்பு வந்ததாகவும் அதை பார்த்திபன் மறுத்தாகவும் பதிவிட்டுள்ளார். அதில், Beginning of this day “hi” ! Beginning’ ஜகன் விஜயா படை-படைப்பாக்கத்தில் நண்பர் லிங்குசாமியின் தம்பிசாமி போஸ் வெளியிடும் split frame-ல் இரு காட்சிகளை காட்டி, இருக்கையில் இருப்புக் கொள்ளா தவிப்பை உண்டாக்கி, முடிவில் இரு கை ஓசையெழுப்பச் செய்கிறார். சினிமா விரும்பிகள் ஒவ்வொருவரும் இரு டிக்கட் வாங்கிப் பார்க்கலாம். இயக்குனருக்கு நிறைய வாய்ப்புகள் வரும். அடுத்ததில் இன்னும் நேர்த்தி கூட்டுவார்!
ஒரு flash back ஆடுகளம்’ படத்தில் நடிக்க திரு.வெற்றிமாறன் வந்து அழைப்பு விடுக்க நான் மறுப்பை விடுக்க காரணம்… நான் திரு.தனுஷிடம் beginning தினுசான கதை ஒன்றை கூறியிருந்தேன் இருவரும் இணைந்து நடிக்க! ஒரு frame-ல் இரு கதைகள் complicated ஆக இருக்குமென்று மென்று முழுங்கி பின் ஓங்கி முழங்கி சொல்லப்பட்டது. ஆக!!!!! “ஆகா miss பண்ணிட்டமே” எனத் தோன்றினாலும் இன்றைய இளம் இயக்குனர்கள் புதிய புதிய யுத்திகளுடன் வருவதால் நாமும் புத்தியை இன்னும் கூர்மை கத்தியாக்கி கோதாவில் இறங்க உத்வேகம் வருகிறது.
From the Beginning தின்றதை மறந்து பசி எடுப்பதைப் போல, வென்றதை மறந்து மேலும் வெல்ல முயல்வோம். இன்றிரவு ‘செம்பி’ பார்த்து மீண்டும் எழுதுகிறேன். விமர்சனமாக அல்ல- வருமானத்திற்காக… நாளைய சினிமாவில் வருமானம் ஈட்ட வெறும் கதைவுட முடியாது. சொல்லும் முறைகள் மூலமே இளம் பார்வையாளர்களை வெல்ல முடியும்! வயது & அனுபவம் பழையது. பழையன மறந்து பயில்வோம் சுடச்சுட ச்!. என்று பதிவிட்டுள்ளார்.