Loading...
- 3-ந்தேதி துவாதசி விழா நடக்கிறது.
- இலவச தரிசனம் 2-ந்தேதி இரவு 10 மணி வரை நடக்கிறது.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருகிற 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா, 3-ந்தேதி துவாதசி விழா நடக்கிறது. 2 நாட்கள் கோவிலில் மார்கழி மாத கைங்கர்யமாக நள்ளிரவு 12.45 மணியில் இருந்து நள்ளிரவு 1.30 மணி வரை மூலவர்களான சீதா, ராமர், லட்சுமணருக்கு தோமால சேவை, கொலு நடக்கிறது.
இதையடுத்து 2-ந்தேதி அதிகாலை 1.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. தொடர்ந்து வைகுண்ட துவாரம் வழியாக பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இலவச தரிசனம் அன்று இரவு 10 மணி வரை நடக்கிறது.
Loading...
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி இந்து தர்ம பிரசார பரிஷத் சார்பில் ஆன்மிக பக்தி இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
Loading...