உலகின் பல நாடுகளில் கோவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையும் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
சுகாதார பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்குமாறு கோரிக்கை
உலகின் பல நாடுகளில், குறிப்பாக சீனா, இந்தியா மற்றும் பல நாடுகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நாங்கள் அறிவோம். அந்தச் சூழ்நிலையில், இந்த நோயைப் பற்றி ஏதாவது ஒரு வகையில் விழிப்புடன் இருப்பது நமக்கு முக்கியமானதாகிவிட்டது.
கோவிட்-19 நோய் தற்போது ஒரு பாரதூரமான பிரச்சினையாகத் தோன்றவில்லை என்றாலும், அது முடிவுக்கு வராததால் நாட்டில் மீண்டும் தலைதூக்கும் அபாயங்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக இதுவரை பின்பற்றப்பட்ட சுகாதாரப் பழக்கவழக்கங்களை முன்னரை விடவும் சிறப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.