Loading...
2022 டிசம்பர் 30 வரை மொத்தம் 101.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை சேகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகத்தின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் கோரிக்கைக்கு இணங்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Loading...
மனிதாபிமான உதவிகள்
அதன்படி, இலங்கையின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய 3.4 மில்லியன் பேருக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
டுவிட்டர் பதிவில், இந்த விடயத்தில் செய்த தாராளமான பங்களிப்புகளுக்கு தனது நன்றியை அவர் தெரிவித்தார், இந்த நிதிச்சேகரிப்பை ஒரு மைல்கல் என்று அவர் விளித்துள்ளார்.
Loading...