பதுளை பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்கானிப்பில் இருந்த மூவருக்கு வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியர் பாலித ராஜபக்ஷ சிகிச்சையளித்த விதம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த வைத்தியர் விடுமுறையில் வீட்டிலிருந்த போது நோயாளிகள் மூவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டமையினால் வைத்தியசாலை ஊழியர்கள் அவசரமாக அவருக்கு அழைப்பினை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது தகவலறிந்த வைத்தியர் தனது கண்ணாடியை கூட மறந்து வீட்டிலிருந்தவாறு காற்சட்டடையுடன் ஓடிவந்து சிக்கிச்சையளித்துள்ளமை பெரும் பாராட்டினை பெற்றுள்ளது.
இதன்போது நோயாளிக்கு சிகிச்சையளிக்க வேறு ஒருவரிடம் கண்ணாடியை வாங்கி பயன்படுத்தி மருத்துவக்கடமையில் ஈடுபட்டுள்ளார்.
இதனை வைத்தியசாலையில் இருந்த சிலர் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.