நாட்டை படுவீழ்ச்சியடையச் செய்த ராஜபக்சக்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சஇ மகிந்த ராஜபக்ச மற்றும் பஸில் ராஜபக்ச ஆகியோர் மக்களின் ஆணைக்கு மதிப்பளித்திருந்தால் நாடு இந்த மோசமான நிலைக்குச் சென்றிருக்காது என கூறியிருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடு மோசமான நிலை
ராஜபக்சக்கள் தங்கள் குடும்ப ஆட்சியில் மாத்திரம் கவனம் செலுத்தியதன் விளைவாகவே இந்த நாடு படுமோசமாக வீழ்ச்சியடைந்தது.
இறுதியில் ராஜபக்சக்களும் ஆட்சிப்பீடத்திலிருந்து மக்களின் எழுச்சியால் தூக்கி வீசப்பட்டார்கள்.
நாட்டைப் படுவீழ்ச்சியடையச் செய்த ராஜபக்சக்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.
ராஜபக்சக்களின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் எமது கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனிமேல் எந்தச் சந்தர்ப்பத்திலும் கூட்டணி அமைக்காது என தெரிவித்தார்.