நந்தமுரி பாலகிருஷ்ணா தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’.
இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார்.
இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா ‘வீர சிம்ஹா ரெட்டி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், துனியா விஜய் மற்றும் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். சில தினங்களுக்கு முன்பு ‘வீர சிம்ஹா ரெட்டி’ திரைப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள மாஸ் மோகுடு என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ வருகிற ஜனவரி 3-ஆம் தேதி மாலை 7.55 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.