முல்லைத்தீவு மாவட்டம் வலைஞர் மடம் கிராமத்தில் போதைக்கு அடிமையான 24 வயதுடைய மகனை தயாரே காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
24 வயதுடைய மகனை அவரது தயார் கஷ்டப்பட்டு உழைத்து மகனை பராமரித்து வந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த இளைஞன் போதைக்கு அடிமையானதால் வீட்டில் இருந்த பொருட்களை ஒவ்வொன்றாக விற்பனை செய்து போதைபொருள் வாங்கி பயன்படுத்தியுள்ளார்.
ஒரு கட்டத்தில் தாயின் மோதிரத்தினை விற்க தருமாறு வற்புறுத்திய வேளை மகனின் தொல்லை தாங்க முடியாமல் தாய் கடந்த 29 ஆம் திகதி முல்லைத்தீவு காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தாயின் முறைப்பாடு
தாயின் முறைப்பாட்டிற்கு அமைய முல்லைத்தீவு காவல்துறையினரால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதி மன்றில் நேற்று முன்னிலைப்படுத்தபட்டார்.
தொடர்ந்து இந்த இளைஞன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு போதைப்பாவனை செய்தமை உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து இந்த இளைஞனை கந்தக்க்காடு புனர்வாழ்வு நிலையத்தில் 06 மாதங்கள் புனர்வாழ்விற்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.