466-ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த மாதம் (டிசம்பர்) 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில் கலந்துக் கொள்வதற்காக இசையமையப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆட்டோவில் வந்து இறங்கினார்.
நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு ஆண்டு தோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 466-ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த மாதம் (டிசம்பர்) 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஸ்தூபி இசையுடன் கோலாட்டம், பறையாட்டம், நையாண்டி மேளம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடைபெற்றன. இதில் கலந்துகொள்வதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆட்டோவில் வந்து இறங்கினார். பலத்த பாதுகாப்புடன் தர்காவுக்கு சென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், அங்கு சந்தனம் பூசும் நிகழ்வில் கலந்துகொண்டு பின்னர் அங்கிருந்து கிளம்பினார்.