நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 449 ரன்கள் எடுத்தது.
2வது நாள் முடிவில் பாகிஸ்தான் 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது.
பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கராச்சியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டிம் சவுத்தி பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 449 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டேவன் கான்வே சதமடித்து 122 ரன்களில் ஆட்டமிழந்தார். டாம் லாதம் 71 ரன்னில் அவுட்டானார். டாம் பிளெண்டல் அரைசதம் அடித்து 51 ரன்னில் வெளியேறினார்.
பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டும் , நசீம் ஷா, ஆகா சல்மான் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய பாகிஸ்தான் அணியின் அப்துல்லா ஷபீக் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஷான் மசூத் 20 ரன்களுக்கும், பாபர் அசாம் 24 ரன்களில் ரன் அவுட் ஆனார். சிறப்பாக விளையாடிய இமாம் உல் ஹக் அரைசதம் அடித்தார்.
இரண்டாம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது. இமாம் உல் ஹக் 74ரன்களும், சவுத் ஷகீல் 13 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.