- பூசணியில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் இருக்கிறது.
- பூசணியில் பலவகையான உணவுகளை தயாரிக்க முடியும்.
தேவையான பொருட்கள்:
பூசணிக்காய் (துருவியது) – 300 கிராம்
உருளைக்கிழங்கு – 1
சோளமாவு – 2 தேக்கரண்டி
அரிசி மாவு – 2 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 கறி
மசாலாத்தூள் – 1
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
எலுமிச்சம்பழச்சாறு – 1 தேக்கரண்டி
ரொட்டித்தூள் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடிதாக நறுக்கிக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து மேல் தோலை உரித்து மசித்துக்கொள்ளவும்.
துருவிய பூசணிக்காயின் மேல் சிறிது தண்ணீர் தெளித்து, 10 நிமிடங்கள் இட்லி வேகவைப்பது போல ஆவியில் வேகவைத்து குளிர்விக்கவும்.
ஒரு பாத்திரத்தில் குளிரவைத்தப் பூசணிக்காய் துருவல், மசித்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறி மசாலா தூள், மிளகு தூள், எலுமிச்சம்பழச்சாறு, அரிசி மாவு, சோளமாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளவும்.
இந்தக் கலவையை கட்லெட் வடிவத்தில் தட்டிக்கொள்ளவும்.
பின்பு ரொட்டித் தூளில் புரட்டி எடுத்து 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.
அடிகனமான வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் கட்லெட்டை அதில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
இப்பொழுது சுவையான பூசணிக்காய் கட்லெட் தயார்.
இதை தக்காளி சாசுடன் சேர்த்து சாப்பிடலாம்.