ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி உதிர்வு ஏற்படுகின்றது.
இதனை எவ்வித பக்கவிளைவுகளுமின்றி இயற்கை வழிகளிலேயே சரி செய்யலாம். அந்தவகையில் தற்போது உங்கள் முடி உதிர்வுக்கு சிறந்த தீர்வினை இங்கே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெந்தயம்
விளக்கெண்ணெய்
தேங்காய் எண்ணெய்
செய்முறை
தண்ணீர் சேர்க்காமல் வெந்தயத்தை நன்கு மாவு போல அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஈரம் இல்லாத போத்தல் ஒன்றில் அரைத்த வெந்தய மாவைப் போட்டுக்கொள்ள வேண்டும்.
அதினுள் 8 தேக்கரண்டி விளக்கெண்ணெய் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
செய்த எண்ணெய்யை நல்ல வெயிலிலோ அல்லது சுடு நீரிலோ காய வைத்துக் கொள்ள வேண்டும்.
பாவனை முறை
வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை பாவித்தால் மாத்திரம் போதும்.
திட்டுதிட்டாக கொட்டிய இடத்தில் புதிய முடி வளரும்.
மேலும் இந்த எண்ணெய்யை கொஞ்சமாக கையில் எடுத்து நன்றாக தலையில் மசாஜ் செய்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு உபயோகிப்பதன் மூலம் அடர்த்தியான, கருமையான முடி வளரும்.