Loading...
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விதிகளின் கீழ் கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர் வசந்த முதலிகே, இன்று (வியாழக்கிழமை) கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
Loading...
சிறைச்சாலை அதிகாரிகள் முதலிகேவை இன்று காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றிருந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் போதே, அவரை எதிர்வரும் ஜனவரி 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
Loading...