Loading...
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் கேரளக்கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதுக்குடியிருப்பு நகரிலிருந்து பஸ் ஒன்றில் கஞ்சாவைக் கொண்டு செல்ல முயற்சித்த போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 14 கிலோகிராம் கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
Loading...
மந்துவில் – மல்லிகைத்தீவு பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...