- அர்ஷ்தீப் சிங் சரியாக பயிற்சி செய்யவில்லை என்பது இந்த போட்டியின் மூலம் தெளிவாக தெரிகிறது.
- நோ-பால் போடாமல் பந்துவீசுவதை சுலபம் என்று நினைத்துதான், பயிற்சியின்போது இந்த விஷயத்தில் கவனக் குறைவாக இருந்திருக்கிறார்.
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி புனேவில் நடைபெற்றது. இதில் இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 206 ரன்களை குவித்தது. இலக்கை துரத்திய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 190 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
இந்த போட்டியில் இந்தியவின் தோல்வியை விட, அர்ஷ்தீப் சிங் செய்த தவறு தான் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டத்தின் 2-வது ஓவரை வீச வந்த அர்ஷ்தீப் சிங் மட்டும் 3 முறை நோ பால்களை வீசி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் தேவையின்றி 13 ரன்கள் கூடுதலாக சென்றது. இதனால் அவருக்கு மீண்டும் 19-வது ஓவரில் வாய்ப்பு தரப்பட்டது.
ஆனால் 19-வது ஓவரிலும் நோ பாலையே போட்டார். 19-வது ஓவரில் அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் ஷனகா ஆவுட்டானார். ஆனால் அந்த பந்து நோ பால் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் இந்திய அணியில் அதிக முறை நோபல் வீசியவர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் இதுகுறித்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-
அர்ஷ்தீப் சிங் சரியாக பயிற்சி செய்யவில்லை என்பது இந்த போட்டியின் மூலம் தெளிவாக தெரிகிறது. நோ-பால் போடாமல் பந்துவீசுவதை சுலபம் என்று நினைத்துதான், பயிற்சியின்போது இந்த விஷயத்தில் கவனக் குறைவாக இருந்திருக்கிறார். ஆனால் அது மிகவும் கடினமான ஒன்று என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.