விக்ரம் – தமன்னா நடிக்கும் புதிய படம் வடசென்னை கதை களத்தில் உருவாகி வருகிறது. இதில் வடசென்னை குப்பத்து பெண்ணாக தமன்னா நடிக்கிறார். இந்த படத்தின் கதையை கேட்டு அதில் ஒன்றி விட்டார். இதன் கிளைமாக்சை கேட்டு அவர் கண்கலங்கி விட்டார் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
வழக்கமாக கவர்ச்சி நாயகியாக வரும் தமன்னா, இந்த படத்தில் எந்தவித ஆடம்பரமும் இல்லாத அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுபற்றி கூறிய அவர், “பாகுபலி படத்துக்கு பிறகு இந்த படமும் எனது திறமைக்கு தீனி போடும் வகையில் அமைந்து இருக்கிறது” என்றார்.
விக்ரம் – தமன்னா நடிக்கும் படத்தை விஜய் சந்தர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கெனவே சிம்பு வைத்து ‘வாலு’ என்ற படத்தை இயக்கியவர். தமன்னா தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.