- இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’.
- இப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது.
மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ஹாங்காங்கில் நடைபெற இருக்கும் 16-வது ஆசிய திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த படம், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை, சிறந்த காஸ்ட்யூம் டிசைன்,சிறந்த புரொடக்ஷன் டிசைன் என 6 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரம் 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.