- ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் பேட்டிங்கின்போது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
- முதல் ஆட்டம் வருகிற 10ம் தேதி அசாம் மாநிலம் கவுகாத்தில் நடக்கிறது.
இலங்கைக்கு எதிரான 3-வது 20 ஓவர் ஆட்டத்தில் இந்திய அணி 91 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கூறியதாவது:-
பேட்டிங் செய்வது மிக எளிதாக இருந்ததாக சூர்யகுமார் யாதவ் சக வீரர்களிடம் தெரிவித்தார். ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் பேட்டிங்கின்போது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். அவரது பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது.
நான் அவருக்கு பந்து வீசினால் சூர்யகுமார் யாதவின் ஷாட்களை பார்த்து என் மனம் உடைந்து விடும். ராகுல் திரிபாதியும் நன்றாக ஆடினார்.
இதேபோல அக்ஷர் படேலை நினைத்தும் நான் பெருமைப்படுகிறேன். இந்த தொடர் வீரர்களுக்கு நம்பிக்கையை அதிகரித்து உள்ளது. 20 ஓவர் போட்டியின் சிறந்த வீரர்கள் ஆவார்கள்.
இவ்வாறு ஹர்த்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.
அடுத்து இந்தியா- இலங்கை அணிகள் இடையே 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடர் நடக்கிறது. முதல் ஆட்டம் வருகிற 10ம் தேதி அசாம் மாநிலம் கவுகாத்தில் நடக்கிறது.