அஜித்குமார் இந்தியா ஹைதரபாத்தில் மே 1 1971-இல் பிறந்தார். அண்மையில் நடந்த கணக்கெடுப்பில் தென்னிந்திய நடிகர்கள் விஜய், மகேஷ்பாபு இருவரையும் மிஞ்சி அல்டிமெட் ஸ்டார் எனும் பட்டத்தை இவர் தட்டிச் சென்றார்.
2014-இல் அதிகமாக விரும்பப்படும் ஆண் எனும் பட்டத்தை இவரின் பெண் ரசிகர்கள் இவருக்கு வழங்கினர்.
அஜித்திற்கு பிரியாணி சமைப்பதில் ஆர்வமுண்டு. மங்காத்தா மற்றும் பில்லா 2 படப்பிடிப்பின்போது சக நடிகர்களுக்கு இவர் பிரியாணியைச் சமைத்து வழங்கினார் என்பது குறிப்பிடதக்கது.
நடிகராக ஆகுவதற்கு முன் மெக்கானிக் ஆக வேலைச் செய்தவர் அஜித். அதனால் தான் இவருக்கு வாகனங்கள் மீது அதிக ஈர்ப்பு. இவர் முறையாக உரிமம் பெற்ற ஃபோர்முலா கார் பந்தயவீரராக, இந்தியாவில் மூன்றாம் நிலையில் இடம் பிடித்துள்ளார்.
சிறந்த நடிப்புத்திறனை வெளிப்படுத்தியதற்காக இவருக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி எனும் விருதினை வழங்கியது.
நடிக்க வந்த தருணத்தில் விபத்தின் போது 15 பெரிய அறுவை சிகிச்சைகளை அஜித் மேற்கொண்டுள்ளார்.
அஜித்தின் புகழ்பெற்ற திரைப்பட பெயர் சிவா. இப்பெயர் காதல் மன்னன், வாலி, வில்லன், பரமசிவன், ஆழ்வார், ஏகன், அசல் என 7 திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளது.
இதுமட்டுமல்லாது, அவருக்கு பிடித்தமான பெயரும் சிவா தான். உதரனமாக சிவா இயக்குநருடன் தொடர்ந்து மூன்று படங்கள் நடித்துள்ளார்.
அந்த மூன்று படங்களின் பெயர்களும், veeram, vethalam,vivegam என மூன்றும் v என்ற ஆங்கில எழுத்தில் ஆரம்பிக்கின்றன் என்பது குறிப்பிடதக்கது.
மேலும், சிவா இயக்கி வெளியான திரைப்படங்களில், நடிகர் அஜித்தின் பெயர், விநாயகம் மற்றும், கணேஷ் என, கடவுள் விநாயகரின் பெயரை குறிக்கும் வண்ணமே உள்ளது.
அஜித்தின் 50ஆவது திரைப்படமான மங்காத்தா இவருக்கு பெரிய அடையாளத்தைத் தந்தது. அதோடு 2012-இன் வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்தது.
தல படமான ஆரம்பம், 10 நாட்களில் 1 பில்லியன் வசூலித்து அதிக லாபம் பெற்ற படமாக அமைந்தது.
அஜித் நடித்த முதல் படம் வெளியாகவில்லை காரணம் படப்பிடிப்பின் போது அதன் இயக்குனர் இறந்துவிட்டார்.
அஜித் பயிற்சி பெற்ற விமானியும் கூட. இவர் போர் விமானத்தை இயக்கும் தகுதியுடையவர்.
தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளர்கள் பிள்ளைகளின் கல்விக்கு பிறருக்கு தெரியாமல் உதவி வருகிறார் அஜித். அதோடு, தொழிலாளர்களுக்கு பண உதவியும் செய்து வருகிறார்.