Loading...
- இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச், செபாஸ்டியன் கோர்டாவை சந்தித்தார்.
- இதில் ஜோகோவிச் 6-7, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், தற்போது தரவரிசையில் 5-வது இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்,
தரவரிசையில் 33-வது இடத்தில் உள்ள அமெரிக்க வீரர் செபாஸ்டியன் கோர்டாவை சந்தித்தார்.
முதல் செட்டை 7-6 (8-10) என்ற கணக்கில் ஜோகோவிச் இழந்தார். சுதாரித்து ஆடிய ஜோகோவிச், இரண்டாவது செட்டை 7-6 (7-3) என்ற கணக்கில் கைப்பற்றினார்.
Loading...
இதையடுத்து, வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி செட் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.
இறுதியில், ஜோகோவிச் 6-7, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
Loading...