Loading...
சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்காக சட்ட ஆணைக்குழுவால் முன் மொழியப்பட்ட புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
மத நம்பிக்கைகளுக்கு அவதூறு தெரிவிக்கும் வகையில் கருத்து வெளியிடப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
தேசிய அமைதி மற்றும் இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்த திட்டமிட்டுள்ள சீர்குலைவை தடுக்கவே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம் என்றார்.
Loading...
மத தலைவர்களை அவமதிக்கும் வகையிலும் இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் சிலர் சமூக ஊடகங்களில் பதிவுகளை இட்டு வருகின்றனர்.
இதனை தடுப்பதற்கே சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
Loading...