Loading...
பேருந்து கட்டணத்தை திருத்துவது குறித்து தனியார் சங்கங்களுக்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
பல நிபந்தனைகளின் கீழ் கட்டணங்களை குறைக்க முடியும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
Loading...
தொடர்ச்சியாக பல மாதங்களாக எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும், பேருந்து கட்டணத்தை குறைக்கமாட்டோம் என தனியார் பேருந்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும், கட்டணத்தை குறைப்பது குறித்து அமைச்சர்கள் மட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் முடிவு எடுக்கப்பட வேண்டும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Loading...