நமது உடலில் தேவையில்லாத அதிகப்படியான கொழுப்பு தேங்குவதன் காரணமாக தான் உடல் பருமன் ஏற்படுகிறது.
இதனால் பல்வேறு உடல் ரீதியான தீராத நோய்களும் நம்மை தாக்குகின்றது. அதிலும் குறிப்பாக நமது உடலின் வயிற்றுப் பகுதியில் கொழுப்புகள் அதிகமாக சேர்கின்றது.
அன்னாசிப்பழம்
அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து, இரண்டையும் ஒன்றாகக் கலந்து ஒரு டம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்க வைக்க வேண்டும்.
பின் அதை இரவில் அப்படியே வைத்து, மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில், பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.
சோம்பு நீர்
நாம் தினமும் சாதாரணமான தண்ணீரைக் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் குடித்து வந்தால், நமது உடம்பில் உள்ள ஊளைச்சதை கரைந்து விடும்.
மேலும் தினமும் சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம், அதிகமாக சேர்த்து வந்தால், அது நமது உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சியை தருகிறது.
பப்பாளிக் காய்
பப்பாளிக் காயைச் சமைத்து, வாரம் இரு முறைகள் சாப்பிட்டு வர வேண்டும். இதனால் நமது உடலின் கெட்டக் கொழுப்புகள் கரைந்து, உடலின் எடை குறைவதைக் காணலாம்.
சுரைக்காய்
சுரைக்காயை வாரத்திற்கு 2 முறைகள் சமைத்து சாப்பிட வேண்டும். இதனால் நமது உடம்பில் தேங்கி இருக்கும் கெட்டக் கொழுப்புகள் கரைந்து, உடல் எடையும் குறைந்துவிடும்.