அனுமன் ராமனுக்கு ஒரு தூதராக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர்.
அனுமன் கோயிலுக்குச் சென்று அவரை தரிசிக்கும் போது, அனுமனின் வாலில் குங்குமம் வைத்து வணங்க வேண்டும் என்று கூறுவார்கள்.
ஆனால் அப்படி என்ன அனுமனின் வாலில் பெருமை உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
அனுமனின் வாலுக்கு குங்குமம் வைத்து வழிபடுவது ஏன்?
அனுமன் சூரியனைக் குருவாக நினைத்து வலம் வந்த போது, மற்ற கிரகங்கள் அனைத்தும் அனுமனின் பின் வலம் வந்தது.
இதன் காரணமாக தான் அனுமனின் வாலிற்குப் பின் ஒன்பது நவக்கிரகங்களும் அமைந்துள்ளது.
எனவே அனுமனின் வாலில் நவக்கிரகங்கள் இருப்பதாகக் கருதப்படுவதால், அனுமனின் வாலின் நுனியில் சந்தனம், குங்குமம் இட்டு 48 நாட்கள் தொடர்ந்து வழிபட்டு வந்தால் நவகிரகங்கள் அனைத்தையும் முழுமையாக வழிபட்டதற்குச் சமமாகும் என்பது ஐதீகம்.
மேலும் அனுமனின் வாலில் பொட்டு வைத்து செய்யும் இந்த வழிபாடானது, நவக்கிரக வழிபாட்டை விட மேலானதாகக் கருதப்படுகிறது.
அனுமன் வாலைத் தொட்டு வழிபடுபவர்களுக்கு, அவர்கள் மனதில் நினைத்து வேண்டிக் கொள்ளும் அனைத்தும் நிறைவேறும் என்று கூறுகிறார்கள்.
திருமணம் நடைபெறாத பெண்கள் ஆஞ்சநேயருக்கான வால் வழிபாடு செய்து வந்தால், பார்வதி தேவியின் அருளால், விரைவில் திருமணம் நடக்கப் பெறுவர்கள்.