- மாதம் ஒரு முறை கூட தாம்பத்தியம் பண்ண முடியவில்லை.
- உயிர்ச்சத்துக்கள் குறைவில்லாமல் பார்க்க வேண்டும்.
மனித உடலானது உணர்வுகளால் பின்னிப்பிணைந்தது, அன்பு, பாசம், மகிழ்ச்சி, கோபம், கவலை, பயம் போன்ற மனதின் உணர்வுகளை வெளிப்படுத்தும் இடமாக உள்ளது. தற்போதுள்ள வேலை, மனஅழுத்தம், உணவுமுறை போன்ற பல்வேறு காரணங்களால் பலருக்கு மாதம் ஒரு முறை கூட தாம்பத்தியத்தில் ஆர்வம் வருவதில்லை என்ற குறைபாடு உள்ளது.
தாம்பத்திய வாழ்வும், உடலோடும், உள்ளத்தோடும் தொடர்புடைய ஒன்றாகும். இது கணவன்-மனைவி உறவை பிணைக்கக்கூடிய முக்கியமான ஒன்று. உங்களைப்போன்று பலர் இந்த பாதிப்பினால் அவதிப்படுகிறார்கள். வைட்டமின்களில் பி3, பி9, சி, டி, ஈ இவைகளில் குறைபாடு இருந்தாலும் தாம்பத்திய குறைபாடுகள் ஏற்படலாம். ஆகவே இந்த உயிர்ச்சத்துக்கள் குறைவில்லாமல் பார்க்க வேண்டும்.
அதற்கான சித்த மருந்துகள்:
1) சாலாமிசிரி லேகியம் ஒரு டீ ஸ்பூன் காலை, இரவு இருவேளை உணவுக்கு பின் சாப்பிடலாம்.
2) அமுக்கரா லேகியம் காலை, இரவு ஒரு டீ ஸ்பூன் உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.
3) பூமி சர்க்கரை கிழங்கு பொடி அல்லது அமுக்கரா பொடி ஒரு டீஸ்பூன், நாக பற்பம் 100 மி.கி., பூரண சந்திரோதயம் 100 மி.கி. கலந்து காலை, இரவு இருவேளை உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.
சிறப்பான தாம்பத்தியத்திற்கு உதவும் உணவுகள்: சைவ உணவுகளில் கேரட், பீட்ரூட், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பூண்டு, தக்காளி, முருங்கை காய், தூதுவளை கீரை, தாளிக்கீரை, பசலைக்கீரை, பூசணி விதைகள், சோயாபீன்ஸ், வேர்க்கடலை, பட்டர் பீன்ஸ், கடற்பாசிகள், பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு, சாக்லேட், கருப்பு திராட்சை, சிவப்பு அரிசி, மாப்பிள்ளை சம்பா, கறுப்பு கவுனி அரிசி. அசைவ உணவுகளில் சிக்கன், வான்கோழி, சிகப்பு இறைச்சி வகைகள், முட்டை, பால், வெண்ணெய், சூரை மீன், கணவாய், இறால், நண்டு, சுறா மீன், மத்திச் சாளை, கணவாய் மீன். பழங்களில்- நேந்திரம், செவ்வாழை, அவகோடா, பேரிச்சை, அத்தி, மாதுளம்பழம், மாம்பழம், பலாப்பழம், துரியன் பழம், தர்ப்பூசணி, ஆரஞ்சு, எலுமிச்சை பழங்கள். இவைகள் விறைப்புத்தன்மை குறைபாட்டை நீக்கி உடலுக்கும், மனதுக்கும் உற்சாகத்தை தரும். முறையான உடற்பயிற்சிகளும் அவசியம்.