சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டன.
புதிய கேலக்ஸி S23 சீரிசில் – கேலக்ஸி S23, கேலக்ஸி S23 பிளஸ் மற்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா என மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு பிப்ரவரி 1 ஆம் தேதி சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வில் கேலக்ஸி S23, கேலக்ஸி S23 பிளஸ் மற்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா என மூன்று ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின்றன.
கடந்த ஆண்டு கேலக்ஸி S22 சீரிஸ் அறிமுக நிகழ்வு பிப்ரவரி 9 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், இந்த ஆண்டு சாம்சங் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை வழக்கத்தை விட முன்கூட்டியே அறிமுகம் செய்யும் முடிவை எடுத்து இருக்கிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. கேலக்ஸி S23, கேலக்ஸி S23 பிளஸ் மாடல்களில் 8 ஜிபி ரேம், 256 ஜிபி / 512 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் 1750 நிட்ஸ் பிரைட்னஸ் வழங்கப்படலாம்.
கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 பிளஸ் மாடல்களில் 200 எம்ஏஹெச் பேட்டரி பூஸ்ட், 3900 எம்ஏஹெச் மற்றும் 4700 எம்ஏஹெச் பேட்டரிகள் வழங்கப்படுகின்றன. கேலக்ஸி S23 மாடலில் 25 வாட் சார்ஜிங் வசதியும், கேலக்ஸி S23 பிளஸ் மற்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடல்களில் 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் Qi வயர்லெஸ் சார்ஜிங், வயர்லெஸ் பவர்ஷேர் அம்சங்கள் வழங்கப்படலாம்.
புதிய கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பொடானிக் கிரீன், மிஸ்டி லிலக், ஃபேண்டம் பிளாக் மற்றும் காட்டன் ஃபிளவர் போன்ற நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. கேலக்ஸி அன்பேக்டு 2023 நிகழ்வு இந்திய நேரப்படி பிப்ரவரி 1 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு துவங்குகிறது. நிகழ்ச்சியின் நேரலை சாம்சங் வலைதலம் மற்றும் யூடியூப் தளங்களில் ஒளிபரப்பாகிறது.