Loading...
சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு யூரியா யு709 உரத்தை மானிய அடிப்படையில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தேயிலை கைத்தொழில் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி உர நிறுவனத்துடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் சந்தையில் சுமார் 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உரத்தை சுமார் 17000 ரூபாயிற்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்ததாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
Loading...
சம்பந்தப்பட்ட உரங்கள், தேயிலை விவசாயிகளின் வீடுளுக்கு நேரடியாக கொண்டு செல்லப்பட்டு வழங்கப்படும் என்றும், மூன்று மாதங்களுக்குள் அதற்கான தொகையை அவர்கள் செலுத்த முடியும் என்றும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Loading...