- இரவு 7 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் எம்.ஐ. கேப்டவுன்-டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- இப்போட்டிகள் கலர்ஸ் தமிழ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.
தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்திய நேரப்படி நேற்று இரவு நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்-ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த பிரிட்டோரியா அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன் எடுத்தது. பிலிப் சால்ட் 47 பந்தில் 77 ரன் எடுத்தார். ஜேம்ஸ் நீசம் 37 ரன்னும், பர்னல் 29 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஈஸ்டர்ன் கேப் அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்ந்தது.
அந்த அணியால் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 170 ரன்னே எடுக்க முடிந்தது. அந்த அணி தொடக்க வீரர் ஸ்மட்ஸ் 66 ரன்னும், டாம் ஆபெல் 40 ரன்னும் எடுத்தனர்.
பிரிட்டோரியா அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 5 மணிக்கு நடக்கும் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்-பர்ல் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரவு 7 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் எம்.ஐ. கேப்டவுன்-டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டிகள் கலர்ஸ் தமிழ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.