நாட்டின் தென்பகுதியில் எதிர்வரும் 19ம் 20ம் திகதிகளில் ஓரளவு மழையை எதிர்பார்க்கலாம் என அறிவிக்கப்படுகின்றது.
வளிமண்டலவியல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
நாட்டில் மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசகக்கூடும் என்றும் கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கிழக்கு , ஊவா மாகாணங்களிலும் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் பல இடங்களில் ஓரளவு மழை எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ மாகாணத்தின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை காணப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்களை அவதானத்துடன் இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.